உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி.டி.சி.ஏ., இரண்டாம் டிவிஷன் ரெயின்போ கிளப் அணி வெற்றி

சி.டி.சி.ஏ., இரண்டாம் டிவிஷன் ரெயின்போ கிளப் அணி வெற்றி

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், இரண்டாவது டிவிஷன் 'யுனிவர்சல் ஹீட் எக்ஸ்சேஞ்சர்ஸ் லிட்., டிராபி' கிரிக்கெட் போட்டி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., 'சி' மைதானத்தில் நடந்து வருகிறது. ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணியும், சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் நினைவு கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.முதலில் பேட்டிங் செய்த, ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணி, 45 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 254 ரன்கள் எடுத்தது.அணி வீரர்கள் ஆதித்யநாதன், 71 ரன்களும், சூர்யகாந்த், 55 ரன்களும், சாதிக் அல் அமீன், 48 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர். எதிரணி வீரர் கார்த்திகேயன், மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.அடுத்து விளையாடிய, சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் நினைவு கிரிக்கெட் கிளப் அணியினர், 35 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 74 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.எதிரணி வீரர் அப்துல் ஹக்கீம், மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். தொடர்ந்து, போட்டிகள் நடந்துவருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி