உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பள்ளி ஆசிரியருக்கு நுாற்றாண்டு விழா

 பள்ளி ஆசிரியருக்கு நுாற்றாண்டு விழா

---------------------------------சரவணம்பட்டி: சிரவையாதினம், ராமானந்த அடிகள் உயர்நிலை பள்ளியின், முன்னாள் ஆசிரியர் சுப்ர மணியம் நுாற்றாண்டு பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. சரவணம்பட்டியில் உள்ள இப்பள்ளியில், ஆசிரியராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் சுப்ரமணியம். தமிழ்ப்பற்று மிக்க அவர், பாடங்களை மட்டுமின்றி, பாடல்களையும் மனதில் பதியும் வகையில் கற்பித்தவர். இவரது நினைவாக முன்னாள் மாணவர்கள் சங்கமம், நுாறாவது ஆண்டு விழாவை நேற்று நடத்தியது. முன்னாள் மாணவர் சங்க தலைவர் மயூரநாதன் தலைமை வகித்தார். சுப்ரமணியம் நினைவாக கவிப்புத்தக வெளியீட்டு விழா நடந்தது. முன்னாள் தலைமை ஆசிரியர்கள் பொன்னம்மாள், சம்பத்குமார், தற்போதைய தலைமை ஆசிரியை பானுமதி ஆகியோர் பாராட்டி பேசினர். முன்னாள் மாணவர் சங்கமத்தின் செயலாளர் மகாத்மா காந்தி, விருந்தினராக பங்கேற்று பேசினார். சுப்ரமணியத்தின் மகள் கோதை நாயகி ஏற்புரை அளித்தார். முன்னாள் மாணவர் சங்கமத்தின் இணைச் செயலாளர் ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ