உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நுாற்றாண்டு கண்ட அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி

நுாற்றாண்டு கண்ட அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி

அன்னுார் : அன்னுார் வடக்கு துவக்கப்பள்ளி நூற்றாண்டு விழா நேற்று முன்தினம் அன்னூரில் நடந்தது.இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், கே.ஜி. மருத்துவமனை தலைவருமான டாக்டர் பக்தவத்சலம் புதிய வளைவை திறந்து வைத்தார்.விழாவில் தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி வரவேற்றார். பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார்.தன்னம்பிக்கை பேச்சாளர் கவிதாசன் பேசுகையில், ''மாணவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த நாள் என்னுடைய நாள். இதை சிறப்பானதாக ஆக்குவேன் என்று கூற வேண்டும். ஒழுக்கம், துணிச்சல், பணிவு, நம்பிக்கை இருந்தால் விதியை மாற்றலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்துப் போவது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நம்பிக்கையோடு செயலில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்,'' என்றார்.முன்னாள் மாணவர் டாக்டர் கோவிந்தராஜன், மன்னீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சவுந்தரராஜன், பேரூராட்சி துணைத் தலைவர் விஜயகுமார் உள்பட பலர் பேசினர். முன்னாள் மாணவர்கள் பலர் பள்ளிக்கு உதவுவதாக தெரிவித்தனர். முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள் பலர் நெகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கண்ணன் குமார் கவிதை வாசித்தார். ரங்கநாதன் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை