உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வங்கி துறையில் முன்னணியில் திகழும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

வங்கி துறையில் முன்னணியில் திகழும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

இ ந்தியாவின் முதல் சுதேசி மற்றும் பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, 1911 முதல் தலைமுறைகளாக இந்தியர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது. நாடு முழுவதும் 4,500க்கும் மேற்பட்ட கிளைகளுடன், 4,115 ஏ.டி.எம்., மையங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட நிதி சேவைகளை வழங்குகிறது. நம்பிக்கை, புதுமை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றை சிறந்து விWளங்கும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி, தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. சிறப்பான மரபையும், வலுவான நாடு முழுவதுமுள்ள பங்களிப்பையும் கொண்ட இந்த வங்கி, சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் சேவை செய்வதை தனது நோக்கமாக கொண்டுள்ளது. கோவையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி தற்போது 13 முழுமையான கிளைகளைக் கொண்டு, தரமான வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வங்கி பல்வேறு வட்டி விகிதங்களில் மிகவும் ஈர்க்கக்கூடிய கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டுக்கடன்கள் 7.35 சதவீத வட்டி விகிதத்திலிருந்தும், வரும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை வாகனக் கடன்கள் 7.85 சதவீத வட்டி விகிதத்திலிருந்தும் ஆரம்பமாகி, முற்றிலும் செயலாக்கக் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன. அதோடு, குறைந்த வட்டியுடன் தனிப்பட்ட கடன்கள், சந்தையில் கிராமுக்கு அதிகபட்ச மதிப்பில் தங்கக் கடன், இந்தியா மற்றும் வெளிநாட்டில் படிப்பதற்கான கல்விக் கடன்களும் எளிதில் கிடைக்கின்றன. தொழில் முனைவோர்களும் நிபுணர்களும் தேவைக்கு ஏற்ப சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பல்வேறு திட்டங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன. மருத்துவர்கள் தங்கள் மருத்துவப் பணி வளர்ச்சிக்காக 8.65 சதவீத ஆரம்ப வட்டி விகிதத்திலிருந்து சிறப்பு திட்டங்களையும் பெற முடியும். கடன்களுடன், வங்கி பல்வேறு வாடிக்கையாளர்களுக்கான தனித்துவமான சேமிப்பு மற்றும் வணிக கணக்குகளையும் வழங்குகிறது. பெண்களுக்கென வடிவமைக்கப்பட்ட சென்ட் குயின் சேமிப்பு கணக்கு 20 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீட்டுத் தொகையுடன் வருகிறது. சென்ட் குயின்கணக்கில் தொலைபேசி வாயிலாக வரம்பற்ற பொது மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்கு ரூ.1,500 மதிப்பிலான வவுச்சர்வழங்கப்படுகிறது. ஊழியர்களுக்கான சென்ட் சேலரிகணக்கு மூன்று வகைகளில் வழங்கப்படுகிறது. இதில் உயர்ந்த வகையில் 1 கோடி ரூபாய் வரை விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. மேலும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி, அரசின் பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. வலுவான நம்பிக்கையுடனும், பலதரப்பட்ட நிதி சேவைகளுடனும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி இத்துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !