கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் மத்திய அதிவிரைவு படையினர்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே ஒத்திகை பயிற்சிக்காக மத்திய அதிவிரைவு படையினர், கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.கோவை வெள்ளலுார் பகுதியில் இருந்து மத்திய அதிவிரைவு படை போலீசார், 142 பேர்,விரைவான பதில் நெருக்கடி நிலை (Quick response crisis situation) ஒத்திகை பயிற்சிக்காக கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எந்தெந்த பகுதிகளில் பதட்டமான பகுதிகள் எனவும், அடிக்கடி பிரச்னைகள் போன்ற சட்ட ஒழுங்கு பிரச்னைகள் உள்ளதா என கேட்டறிந்தனர்.மத்திய ரிசர்வ் படை அதிகாரிகள் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகள் கலவரம் ஏற்படும் பகுதிகள் என ஆய்வு செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் இப்பகுதியில் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் பட்சத்தில் மாநில போலீசார் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும் போது, மத்திய அதிவிரைவு படையினர் வருவர். இதற்கு முன்னோட்டமாக கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், ஒத்திகை பயிற்சி மேற்கொண்டு ஆய்வு செய்யப்பட்டது,' என்றனர்.