உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மத்திய அதிவிரைவு படையினர் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசிட்

மத்திய அதிவிரைவு படையினர் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசிட்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஒத்திகை பயிற்சிக்காக மத்திய அதிவிரைவு படையினர் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். கோவை, வெள்ளலுார் பகுதியில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர், துணை கமாண்டர் அபிேஷக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், மோகன்லால் உள்ளிட்ட ஐந்து இன்ஸ்பெக்டர்கள், 108 மத்திய விரைவுப்படையினர், நெருக்கடியான நிலையில் உடனடி செயல்பாடு ஒத்திகை பயிற்சிக்காக, தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பதட்டமான பகுதிகள், அடிக்கடி பிரச்னைகள் ஏற்படும் பகுதி, சட்ட ஒழுங்கு பிரச்னைகள் உள்ளதா என கேட்டறிந்தனர். மேலும், இயற்கை பேரிடர் வாய்ப்புள்ள பகுதிகள், ஊராட்சிகளின் மக்கள் தொகை, மழை காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகள், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகள் குறித்தும் தாலுகா போலீசாரிடம் கேட்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !