மேலும் செய்திகள்
40 டன் மளிகை பொருள் சபரிமலைக்கு பயணம்
22-Dec-2025
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில், கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, தத்து குடும்பத்தினருக்கு புத்தாடைகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில், புனித வின்சென்ட் தே பவுல் சபை உள்ளது. இந்த சபையினர் ஏழை, எளிய கிறிஸ்தவ மக்களை தத்தெடுத்து, அவர்களுக்கு மாதம் தோறும் அரிசி, மளிகை பொருட்களை வழங்கி வருகின்றனர். கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, இவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் அரிசி, மளிகை பொருட்கள், கேக் வழங்கும் விழா, ஆலயத்தில் நடந்தது. விழாவுக்கு, பங்கு பாதிரியார் பிலிப் தலைமை வகித்து, கிறிஸ்தவ தத்து குடும்பத்தினருக்கு புத்தாடைகள், அரிசி, பருப்பு, சர்க்கரை, ஆயில் ஆகிய பொருட்களை வழங்கி பேசினார். முன்னதாக, சபை தலைவர் எலிசபெத் வரவேற்றார். பொருளாளர் மணிசேகரன் அறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் பிரான்சிஸ் நன்றி கூறினார். சபை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
22-Dec-2025