100 சதவீத தேர்ச்சி பெற்றால் பாராட்டுச் சான்றிதழ்
கோவை; பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதற்காக உழைத்த ஆசிரியர்களுக்கு, பாராட் டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஆசிரியர்கள் பல புதுமையான கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி, கடந்த கல்வியாண்டில் 1,364 அரசு பள்ளிகள் 10ம் வகுப்பிலும், 387 அரசு பள்ளிகள் 12ம் வகுப்பிலும் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளன. இதனை ஊக்கப்படுத்தும் வகையில், தேர்வு முடிவுகள் வெளியான பின், 10 நாட்களுக்குள் 100 சதவீ தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்கள், இணைக்கப்பட்ட படிவத்தில் gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்தப் பாராட்டு முயற்சி, அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.