உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு

அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு

கோவை : கோவை மாவட்ட இந்து அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவராக, மீண்டும் நியமிக்கப்பட்ட ராஜாமணி நேற்று பொறுப்பேற்றார்.தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்களை நிர்வகிக்கும் வகையில், மாவட்ட அளவில் அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, முக்கியமான கோவில்களுக்கு தனித்தனி அறங்காவலர் குழு செயல்படுகிறது. மாவட்ட அளவிலான குழுவினரின் பதவி காலம் சமீபத்தில் முடிந்தது. அக்குழுவினருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.அறங்காவலர் குழு தலைவராக ராஜாமணி, உறுப்பினர்களாக தனபால், கர்ண பூபதி, கவிதா, பார்த்திபன் மயில்சாமி நியமிக்கப்பட்டனர். இவர்கள், கோனியம்மன் கோவிலில் நடந்த விழாவில் பொறுப்பேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை