சலானி ஜூவல்லரி மார்ட் கண்காட்சி
கோவை: சென்னை சலானி ஜுவல்லரி மார்ட்டின், பிரம்மாண்ட ஜூவல்லரி கண்காட்சி, கோவை அவிநாசி ரோட்டில் ஹோட்டல் கிராண்ட் ரீஜென்டில் நடந்து வருகிறது. மனதை மயக்கும் ஆன்டிக், டைமண்ட், ஜடாவ் போல்கி, விக்டோரியன், டெம்பிள் நகைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. சலானி ஜூவல்லரி மார்ட் இயக்குனர் ஸ்ரீபால் சலானி கூறுகையில், ''இந்த எக்ஸ்போவில் வாங்கும், 22 காரட் தங்க நகைகளுக்கு அன்றைய மார்க்கெட் விலையை விட, கிராம் ஒன்றுக்கு ரூ.600 குறைவு. வைரம் கேரட் ஒன்றுக்கு ரூ.58,900 மட்டுமே. ஜடாவ் போல்கி, விக்டோரியன் நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை,'' என்றார். எக்ஸ்போவுக்கு வந்த பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு, துணை மார்க்கெட்டிங் மேலாளர் பாலாஜி நன்றி கூறினார். இன்றுடன் நிறைவு பெறும் இக்கண்காட்சியை, காலை 10 முதல் இரவு 8.30 மணி வரை பார்வையிடலாம்.