மேலும் செய்திகள்
ரயில் இயக்கத்தில் மாற்றம்
11-Jun-2025
கோவை; தண்டவாளம் மாற்றும் பணிகள் நடக்க உள்ளதால், கோவை - நாகர்கோவில் ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல் - மதுரை ரயில் பாதையில், வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லுார், ரயில்வே ஸ்டேஷன்களில் தண்டவாளம் மாற்றும் பணிகள் நடக்க உள்ளன. இதை முன்னிட்டு, ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, கோவையிலிருந்து காலை 8:00 மணிக்கு புறப்படும் கோவை - நாகர்கோவில்(16322) எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் வரும், 31ம் தேதி வரை, திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே இயக்கப்படாது. கோவையில் இருந்து திண்டுக்கல் வரையே இயக்கப்படும்.அதேபோல், நாளை முதல், 31ம் தேதி வரை, ஞாயிறு மற்றும் புதன் கிழமை தவிர, திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே, முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.இந்த சிறப்பு ரயில், மாலை 3:45 மணிக்கு புறப்பட்டு, இரவு, 9:05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
11-Jun-2025