தண்டவாளப் பராமரிப்பு; ரயில் இயக்கத்தில் மாற்றம்
கோவை; தண்டவாளப் பராமரிப்பு பணிகள் காரணமாக, ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போத்தனுார் ரயில்வே யார்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதை முன்னிட்டு ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கண்ணுார் - கோவை(16607) இடையேயான ரயில் நாளை பாலக்காடு ரயில்வே ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், மதுரை - கோவை(16722) எக்ஸ்பிரஸ் ரயில், நாளை, 31ம் தேதி பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும். கோவை - கண்ணுார்(16608) ரயில், நாளை மற்றும், 31ம் தேதி, பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மாலை 3:10 மணிக்கு புறப்படும். அதேபோல், கோவை - மதுரை(16721) எக்ஸ்பிரஸ் ரயில், நாளை பொள்ளாச்சியில் இருந்து மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு செல்லும்.