உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில் இயக்கத்தில் மாற்றம்

ரயில் இயக்கத்தில் மாற்றம்

கோவை; ரயில்வே யார்டில், மேம்பாட்டு பணிகள் காரணமாக, ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஈரோடு - கரூர் இடையேயான ரயில்பாதையில், பொகலுார் ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதை முன்னிட்டு, ஈரோடு - பாலக்காடு ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு - பாலக்காடு டவுன்(16843) எக்ஸ்பிரஸ் ரயில் வரும், நாளை, 14, 16ம் தேதிகளில் கரூர் ரயில்வே ஸ்டேஷன் வரை இயக்கப்படும். பணிகள் முடிந்த பின், அந்த ரயில் முன்பதிவற்ற ரயிலாக, பாலக்காடு வரை இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ