உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிக பாரம் ஏற்றிய வாகனங்களுக்கு ரூ.6.11 லட்சம் இணக்க கட்டணம்

அதிக பாரம் ஏற்றிய வாகனங்களுக்கு ரூ.6.11 லட்சம் இணக்க கட்டணம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அதிக பாரம் ஏற்றிச் சென்ற, 11 வாகனங்களுக்கு இணக்க கட்டணம் வசூலித்தனர்.பொள்ளாச்சி கோட்டத்தில், கிணத்துக்கடவு, வடக்கிபாளையம், ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில், இருந்து அதிகளவு கனிமவளங்கள், கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இந்நிலையில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சொக்கனுார், நடுப்புணி, வடக்கிபாளையம் உள்ளிட்ட பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) கோகுலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர். அதில், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி சென்ற, லாரிகளை பறிமுதல் செய்தனர்.வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில்,'பொள்ளாச்சியில், கடந்த, மூன்று நாட்களாக மேற்கொண்ட ஆய்வில், அதிக எடைக்கு பாரம் ஏற்றியதாக மொத்தம், 11 வாகனங்களுக்கு, 6 லட்சத்து, 11 ஆயிரம் ரூபாய் இணக்க கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்பட்டது.தொடர்ந்து, விதிமுறை மீறல் குறித்து கண்காணிப்பு செய்யப்படுகிறது. இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ