உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சென்னை - போத்தனுார் சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை - போத்தனுார் சிறப்பு ரயில் அறிவிப்பு

சேலம்: சுதந்திர தின விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க, சென்னை - போத்தனுார் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும், 14 இரவு, 11:50க்கு புறப்படும் ரயில், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே மறுநாள் காலை, 8:30க்கு போத்தனுாரை அடையும். சேலத்துக்கு அதிகாலை, 5:10, ஈரோடுக்கு, 6:20க்கு வந்து செல்லும்.மறுமார்க்க ரயில், வரும், 17 இரவு, 11:30க்கு கிளம்பி, அடுத்தநாள் காலை, 8:20க்கு சென்னையை அடையும். நள்ளிரவு, 12:50க்கு ஈரோடு, 1:50க்கு சேலம் வந்து செல்லும்.

ரயில் இயக்கத்தில் மாற்றம்

கே.எஸ்.ஆர்., பெங்களூரு ஸ்டேஷனில் மறு சீரமைப்பு பணி நடக்க உள்ளதால், வரும், 15 முதல், 2026 ஜன., 15 வரை, காலை, 9:10க்கு கிளம்பும் எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கே.எஸ்.ஆர்., ஸ்டேஷனுக்கு பதில், கார்மேல்ராம், பையப்பனஹள்ளி வழியே இரவு, 9:00 மணிக்கு, எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ஸ்டேஷனுக்கு செல்லும். மறுமார்க்க ரயில் காலை, 6:10க்கு கே.எஸ்.ஆர்., ஸ்டேஷனுக்கு பதில், எஸ்.எம்.வி.டி., ஸ்டேஷனில் இருந்து கிளம்பும். இந்த ரயில்கள், பெங்களூரு கன்டோண்ட்மென்ட், கே.எஸ்.ஆர்., பெங்களூரு ஸ்டேஷன்களுக்கு செல்லாது என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை