| ADDED : பிப் 20, 2024 05:01 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடந்த சதுரங்க போட்டியில், இந்திய வீரர் ஷியாம் நிகில் முதலிடம் பெற்றார்.தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம், கோவை மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் பொள்ளாச்சிமகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில்,18வது தமிழ்நாடு ஐஎம் நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் சதுரங்க போட்டி கடந்த, ஆறு நாட்களாக கல்லுாரி வளாகத்தில் நடந்தது. அதன் இறுதிச்சுற்றின் முடிவில் ஷியாம்நிகில், சிட்னிகோவ் அன்டோன் மற்றும் கோவையை சேர்ந்த ஆகாஷ் ஆகியோர் ஆறு புள்ளிகளுடன் போட்டியிட்டனர். அதில், ஷியாம்நிகில் சிறந்த டை பிரேக் பெற்று முதல் இடத்தை தட்டி சென்றார்.சிட்னிகோவ் அன்டோன் மற்றும் ஆகாஷ் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றனர்.தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. என்.ஐ.ஏ., கல்வி நிறுனங்களின் செயலாளர் ராமசாமி வெற்றி பெற்றோருக்கு பரிசுகளை வழங்கினார். கோவை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் தனசேகர் வரவேற்றார்.தமிழ்நாடு மாநில சதுரங்க கழக துணைத்தலைவர் பேராசிரியர் அனந்தராமன், தலைமை நடுவர் சுரேஷ் சந்திர சாஹூ பங்கேற்றனர். தமிழ்நாடு மாநில சதுரங்க கழக துணைத்தலைவர் விஜயராகவன் நன்றி கூறினார்.