உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதல்வர் கோப்பை கபடி போட்டி; முதலிடம் பிடித்தது போலீஸ் அணி

முதல்வர் கோப்பை கபடி போட்டி; முதலிடம் பிடித்தது போலீஸ் அணி

கோவை; அரசு ஊழியர்களுக்கான முதல்வர் கோப்பைக்கான கபடி போட்டி, கற்பகம் பல்கலையில் நடந்தது. நான்கு அணிகள் விளையாடின. நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதியில், தமிழ்நாடு மின் வாரியம் அணி, கோயம்புத்துார் மாவட்ட போலீஸ் அணியை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதியில், கோவை போலீஸ் அணி, காளப்பட்டி ரெட் டிராகன்ஸ் அணியை வென்றது. இறுதிப்போட்டியில் இரு பலம் வாய்ந்த அணிகளான, கோவை போலீஸ் அணியும், தமிழ்நாடு மின் வாரிய அணியும் மோதின. இதில், 52-39 என்ற புள்ளிக்கணக்கில் போலீஸ் அணி வென்று முதலிடம் பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை