உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தைகள் நீர் நிலைகளுக்கு செல்லாமல் பாதுகாக்கணும்

குழந்தைகள் நீர் நிலைகளுக்கு செல்லாமல் பாதுகாக்கணும்

தொண்டாமுத்தூர்; நீர்நிலைகளில், தேங்கி நிற்கும் நீரில் குழந்தைகள் குளிக்க செல்லாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து பேரூர் டி.எஸ்.பி., சிவக்குமார் கூறியதாவது:பேரூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், கோடை காலம் என்பதால், ஏராளமான குளம் மற்றும் குட்டைகளில், நீண்ட நாட்களாக நீர் தேங்கி இருப்பதால், அங்கு அதிகளவு சகதி இருக்கும். தற்போது கோடை விடுமுறை என்பதால், ஏராளமான சிறுவர்கள், தங்களது நண்பர்களுடன் இணைந்து, நீர்நிலைகளில் தேங்கியிருக்கும் நீரில் இறங்கி குளிக்கின்றனர்.சகதி அதிகமாக இருக்கும் பகுதிகளில் இறங்கி குளித்தால், அதில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பே, முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். எனவே, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் எங்கு செல்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். பாதுகாப்பில்லாத இடங்களுக்கு செல்வதை தடுக்க வேண்டும். உறவினர் வீடுகளுக்கு தனியாக அனுப்பி வைக்கக்கூடாது.நீர்நிலைகளுக்கு தனியாக செல்லக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். நீர்நிலைப் பகுதிகளில், போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை