உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நம்ம ஊர் கதை போட்டி பரிசு வென்ற குழந்தைகள்

நம்ம ஊர் கதை போட்டி பரிசு வென்ற குழந்தைகள்

கோவை; 'இல்லம் தேடிக் கல்வி 2.0' திட்டத்தில், மாணவர்களின் மொழித் திறனை ஊக்குவிக்கும் வகையில், கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்ட 'நம்ம ஊர் கதை' என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் தேர்வாகிய மாணவ, மாணவியருக்கு, மாவட்ட கல்வித்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.மாணவர்களின் கற்றல் இடைவெளிகளை நீக்கும் நோக்கில், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் துவக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில், 838 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.அன்னுார், காரமடை, பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும் வால்பாறை மையங்களைச் சேர்ந்த, 339 குழந்தைகள் எழுதிய கட்டுரைகள் முதல்நிலைத் தேர்வில், தேர்வு செய்யப்பட்டன. அதில் சிறந்த 131 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி