உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சிகள்: பள்ளிகளில் உற்சாக கொண்டாட்டம்

 குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சிகள்: பள்ளிகளில் உற்சாக கொண்டாட்டம்

கோவை: கோவையில் அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகளில், குழந்தைகள் தின விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற விழாவில், சிறுவர்கள் நேரு போன்று சிவப்பு ரோஜா அணிந்த உடையில் வந்து, விழாவை கொண்டாடினர். மாணவர்கள் அமைத்த கணித மன்றம் மற்றும் அறிவியல் பொருட்காட்சியை, வட்டாரக் கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்து பார்வையிட்டார். ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்கள் பயன்படுத்த புதிய நூலகம் திறந்து வைக்கப்பட்டது. மாணவர்களுக்கு மதிய உணவுடன், இனிப்பும் வழங்கப்பட்டன. பீளமேடு மாநகராட்சி பள்ளியில் நடந்த விழாவில், 'உயிர் அமைப்பு' சார்பில் மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. ரத்தினபுரி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், மாணவர்கள் நேரு மாஸ்க் அணிந்து பாடல்கள் பாடினர். இப்பள்ளியில் பயிலும் 5ம் வகுப்பு மாணவி ஜெர்ஷ்னி, 1330 திருக்குறள் பாடங்களை 39 நிமிடங்களில் முற்றோதல் செய்து சாதனை படைத்துள்ளார். இதற்காக, புதுச்சேரி 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அமைப்பு விருது வழங்கி கவுரவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ