உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துாய்மை இயக்கத்தால் சிறுவர் பூங்கா பளிச்

துாய்மை இயக்கத்தால் சிறுவர் பூங்கா பளிச்

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி கிளை மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி ஆகியன இணைந்து துாய்மை இயக்கம் திட்டத்தில் நாகாளம்மன் நகரில் உள்ள சிறுவர் பூங்காவை தூய்மைப்படுத்தினர். இதில், தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர்கள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ