உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மிளகாய் விலை சரிவு; விவசாயிகள் வேதனை

மிளகாய் விலை சரிவு; விவசாயிகள் வேதனை

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் பச்சை மிளகாய் விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில், விவசாயிகள் விளை பொருட்களை ஏல முறையில் விற்பனை செய்கின்றனர். மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து இருப்பதால், வியாபாரிகள் உடனடியாக வாங்கி செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.மார்க்கெட்டில் தற்போது பச்சை மிளகாய் விலை கடுமையாக சரிந்துள்ளது. இம்மாதம் ஆரம்பத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய், 35 முதல் 40 ரூபாய் வரை இருந்தது. ஆனால் தற்போது, 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டில், பச்சை மிளகாய் வரத்து கடந்த ஒரு வாரமாக அதிகரித்து காணப்படுகிறது. மிளகாயும் சேதமின்றி தரத்துடன் இருந்தது. ஆனால், வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது,' என்றனர்.தோட்டக்கலை துறையினர் கூறுகையில், 'ஆண்டுதோறும் பச்சை மிளகாய், 50 முதல் 70 ஹெக்டேர் அளவு சாகுபடி செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு, சாகுபடி பரப்பு, 70 ஹெக்டேருக்கும் அதிகமாக உள்ளது. மேலும், மிளகாய் சாகுபடிக்கு ஏற்றவாறு பருவநிலையும் இருப்பதால், மிளகாய் வரத்து அதிகரித்துள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ