உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்சோ வழக்கில் முன்ஜாமின் கோரி ஐகோர்ட்டில் கிறிஸ்துவ மதபோதகர் மனு

போக்சோ வழக்கில் முன்ஜாமின் கோரி ஐகோர்ட்டில் கிறிஸ்துவ மதபோதகர் மனு

சென்னை:'போக்சோ' வழக்கில் தலைமறைவாக உள்ள கிறிஸ்துவ மதபோதகர் ஜான் ஜெபராஜ், முன் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ், 35. சமூக வலைதளத்தில், கிறிஸ்துவ மதப்பாடல்கள் பாடி பிரபலமானார். கோவை மாவட்டத்தில், 'கிங்ஸ் ஜெனரேஷன்' என்ற தேவாலயத்தில், மதபோதகராகவும் உள்ளார். இவர், கடந்தாண்டு மே 21ல், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தன் வீட்டில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில், பங்கேற்ற இரண்டு சிறுமியருக்கு, ஜான் ஜெபராஜ் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.இது தொடர்பான புகாரில், கோவை காந்திபுரம் மத்திய மகளிர் காவல் நிலையத்தில், ஜான் ஜெபராஜ் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவரை பிடிக்கும் பணியில், தற்போது தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு அவர் தப்பிச் செல்லாமல் இருக்க, கோவை மாவட்ட காவல் துறை சார்பில், விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு, 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 'போக்சோ' வழக்கில் தன்னை போலீசார் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு, ஜான் ஜெபராஜ் மனு தாக்கல் செய்துள்ளார்.மனு விபரம்:கோவையில், 2013ல், ரீமா ஷெர்லின் என்பவருடன் எனக்கு திருமணம் நடந்தது. தற்போது, நானும், என் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். என் மனைவி, அவரது குடும்பத்தினர் துாண்டுதலில், சிறுமியரை வைத்து, எனக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.உள்நோக்கத்துடன் பொய்யான புகாரில், போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பொய் வழக்கில் என்னை போலீசார் கைது செய்தால், மரியாதையை இழக்க நேரிடும்.நீதிமன்ற அனுமதியின்றி, வெளிநாடு செல்ல மாட்டேன். காவல் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். போக்சோ வழக்கின் முதல் தகவல் அறிக்கை விபரங்களை வழங்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். முன்ஜாமின் வழங்க, நீதிமன்றம் விதிக்கும் எந்தவொரு நிபந்தனையையும் ஏற்கத் தயாராக உள்ளேன். ஐந்து வயது மகன் உள்ள நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ், எந்த குற்றத்தையும் செய்ததாகக் கூறுவதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை