உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்; தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்; தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

- நிருபர் குழு -இயேசு கிறிஸ்து பிறந்த நாளை, கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் தினமாக நாடு முழுவதிலும் கொண்டாடுகின்றனர். பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு புனித லுார்து அன்னை தேவாலயத்தில், இரவு, 11:00 மணி முதல் நள்ளிரவு, 2:00 மணி வரை கிறிஸ்துமஸ் திருப்பலி திருவிழா நடந்தது.பங்கு தந்தை ரெவெரன்ட் பாதர் அருட்திரு ஜேக்கப் அடிகளார், அருட் சகோதரர் ஜான்பால் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றி மக்களுக்கு ஆசி வழங்கினர்.இதில், இயேசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சியை ஆலயத்தில் தத்ரூபமாக காண்பிக்கப்பட்டது. சிறப்பு ஆராதனை வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்று பண்டிகையை இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஆலயத்தை சுற்றிலும், ஆலயத்துக்குள்ளும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. பொள்ளாச்சி மேற்கு போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.பொள்ளாச்சி மகாலிங்கபுரம் இந்திரா நகர் சி.எஸ்.ஐ., தேவாலயத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.

வால்பாறை

வால்பாறை சி.எஸ்.ஐ., தேவாலயம், ஆர்.சி., சர்ச், சென்லுக் சர்ச், ரொட்டிக்கடை புனிதவனத்துசின்னப்பர் ஆலயம், கருமலை வேளாங்கண்ணிமாதா ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்துவ ஆலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வண்ணமயமாய் காட்சியளிக்கிறது.கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, வால்பாறை சி.எஸ்.ஐ., தேவாலயத்தில் ஆனைமலை மறைமாவட்ட தலைவர் சார்லிபன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை, ஜெபக்கூட்டம் நடந்தது.துாயஇருதய தேவாலயத்தில், ஆலய பங்குதந்தை ஜெகன்ஆண்டனி தலைமையில் சிறப்பு பிரார்த்தனையும், கூட்டுப்பாடற்திருப்பலியும் நடைபெற்றது. கோ-ஆப்ரேட்டிவ் காலனி புனித லுாக்கா ஆலய பங்கு தந்தை ஜிஜோ தலைமையில், திருப்பலி, சிறப்பு ஜெபவழிபாடு நடந்தது. நுாற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

உடுமலை

உடுமலை சுற்றுப்பகுதி தேவாலயங்கள், ஒருவாரமாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும், குடில் அமைக்கப்படும் கொண்டாட்டங்கள் நடக்கிறது. தளி ரோடு சி.எஸ்.ஐ., இமானுவேல் ஆலயத்தில், கீத ஆராதனைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு முதல், சிறப்பு பிரார்த்தனை மற்றும் நேற்று காலையில் சிறப்பு ஆராதனை நடந்தது.உடுமலை அற்புத அன்னை ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. சுற்றுப்பகுதி அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் நடந்தன. வீடுகளில், கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, குடில் அமைத்தும், பிரார்த்தனை செய்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி