வரும் 16, 17 தேதிகளில் சி.ஐ.ஐ., கனெக்ட்
கோவை; இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், 'சி.ஐ.ஐ., கனெக்ட்' நிகழ்ச்சி, 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்கள், சந்தை வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து இந்நிகழ்வில் நிபுணர்கள் உரை நிகழ்த்துவர். வரும் 16, 17ல், கோவையில் 23வது சி.ஐ.ஐ., கனெக்ட் நிகழ்வு நடக்கிறது. தமிழக அரசு மற்றும் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா (எஸ்.டி.பி.ஐ.,) ஆகியவற்றுடன் இணைந்து இந்நிகழ்வு நடக்கிறது. 'ஏ.ஐ.,: நுண்ணறிவின் புதிய சகாப்தத்தை நோக்கிய மாறுதல்' என்ற கருப்பொருளில் நடக்கும் இந்நிகழ்வுக்கு, 'மேட்ரிமோனி டாட் காம்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முருகவேல் தலைமை வகிக்கிறார். ஐ.டி., அமைச்சர் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மாற்றத்துக்கு தயாராகுதல், தமிழகத்தின் ஸ்டார்ட் அப் தொழிற்சூழல், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம், உற்பத்தித் துறைக்கான பாதையைக் கட்டமைத்தல், ஏ.ஐ., சகாப்தத்துக்கான திறன் மேம்பாடு உள்ளிட்டவை சார்ந்து, 40 பேர் உரையாற்றுகின்றனர்.