உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டணம் மயான பகுதியில் குடிமகன்கள் அட்ராசிட்டி

பட்டணம் மயான பகுதியில் குடிமகன்கள் அட்ராசிட்டி

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, பட்டணம் மயானம் அருகே இரவு நேரத்தில் மது அருந்துபவர்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டணம் கிராமத்தில், அரசு தரப்பில் மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டப்படுகிறது. இங்கு ஒரு சிலர் குடியேறியுள்ளனர். இதன் அருகாமையில் மயானம் மற்றும் மயானக்கூரை உள்ளது. இந்த மயானக்கூரை, தொகுப்பு வீடு அருகே, இரவு நேரத்தில் சிலர், மது குடிக்கின்றனர். அதன்பின், காலி மது பாட்டில்கள், உணவு பொட்டலங்களை வீசி செல்கின்றனர். 'குடி'மகன்களின் அட்ராசிட்டியால், இடையூறு ஏற்படுகிறது. மக்களுக்கும் அச்சத்தில் உள்ளனர். மேலும், இந்த வீட்டின் அருகாமையில் நீரோடை இருப்பதால் ஒரு சில விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து வருகின்றனர். ஆனால் இங்கு உடைந்த மது பாட்டில்கள் இருப்பதால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் நலன் கருதி, இங்குள்ள மயான கூரை மற்றும் பாறை பகுதியில் மது அருந்துவதை தடுக்க போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை