உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எப்., கிளை அலுவலகம் துவங்க சி.ஐ.டி.யு., மனு

பி.எப்., கிளை அலுவலகம் துவங்க சி.ஐ.டி.யு., மனு

வால்பாறை, ; தொழிலாளர்களின் நலன் கருதி, வால்பாறையில் பி.எப்., அலுவலகம் திறக்க வேண்டும் என சி.ஐ.டி.யு., கோரிக்கை விடுத்துள்ளது.வால்பாறை சி.ஐ.டி.யு., தொழிற்சங்க பொதுசெயலாளர் பரமசிவம், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த மூன்று தலைமுறைகளாக பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர்கள் ஆரம்ப காலத்தில் அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், எஸ்டேட் நிர்வாகங்கள், வாய் மொழிலாக பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி கேட்டு, அவர்களை பணியில் அமர்த்தினர். தற்போது, ஆதார் அட்டை பதிவு செய்த பின்னும் இதே நிலை தொடர்கிறது.இதனால், தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆதார் அட்டையில் மாறுபட்ட விபரங்கள் உள்ளதால், அவர்கள் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) பெற முடியாமல் தவிக்கின்றனர்.இதற்காக, வால்பாறையிலிருந்து, 110 கி.மீ., தொலைவில் கோவையில் உள்ள பி.எப்., அலுவலகத்திற்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. இதிலும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால், உரிய நேரத்தில் பணப்பலன்களை பெற முடியாமல் தொழிலாளர்கள் தவிக்கின்றனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், வால்பாறை நகரில் பி.எப்., கிளை அலுவலகம் துவங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ