குழந்தைகளுக்கு உதவி சி.ஐ.டி.யு., தீர்மானம்
கோவை; கோவை மாநகர சி.ஐ.டி.யு., பொதுத்தொழிலாளர் சங்க, 11வது மாவட்ட மாநாடு, கோவை மில் சங்க கட்டடத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். நலவாரியங்களில் பயனாளிகளாக உள்ளவர்களின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய தலைவராக ரமணி, செயலாளராக நவநீதகிருஷ்ணன், பொருளாளராக ஈஸ்வரன் உள்ளிட்ட 19 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.மாவட்ட துணைச் செயலாளர் சுப்பிரமணியம் சி.ஐ.டி.யு., மாநில குழு உறுப்பினர் ஜான் அந்தோணிராஜ், சி.ஐ.டி.யு., மாவட்டக் குழு உறுப்பினர் ஏழுமலை, உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.