மேலும் செய்திகள்
லாரி - டூ வீலர் மோதல் மாஜி எஸ்.ஐ., உயிரிழப்பு
30-Oct-2024
போத்தனுார், திருமறை நகரை சேர்ந்தவர் அப்துல் ரகிம், 62. இவர் உக்கடம், வின்சென்ட் சாலையில் சந்திப்பில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ஒருவர் திடீரென சாலையை கடந்தார். அவரை பார்த்து கவனமாக செல்லுமாறு ரகிம் கூறினார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த நபர் ரகிமை தாக்கி கீழே தள்ளினார். இதில் ரகிம் காலில் அடிபட்டது. ரகிமின் புகாரின் பேரில் உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரகிமை தாக்கிய சுண்டக்காமுத்துாரை சேர்ந்த அருண், 40 என்பவரை கைது செய்தனர். சூதாட்டம் ; 11 பேர் கைது
ஆர்.எஸ் புரம் பகுதியில் பணம் வைத்து சீட்டாடிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். சீரநாயக்கன்பாளையம் பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, அப்பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, அங்கிருந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டு மற்றும் ரூ. 44 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சமாதானம் செய்தவரை தாக்கியவர் கைது
செல்வபுரம், என்.எஸ்.கே., வீதியை சேர்ந்த சதீஷ், 23; ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த போது, இவரின் நண்பருடன் செல்வபுரம் எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த சூர்ய பிரசாத், 28 வாக்குவாதத்தில் ஈடுபடுவதை பார்த்தார். அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரையும் சமாதானம் செய்தார். இதில் ஆத்திரமடைந்த சூர்ய பிரசாத் சதீசையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர் அங்கிருந்த கற்களை எடுத்து சதீசை தாக்கினார். இதையடுத்து, சதீஷ் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சூர்ய பிரசாத் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். சாலை விபத்தில் இருவர் பலி
கோவை, வேலாண்டிபாளையம் கொண்டசாமி நாயுடு வீதியை சேர்ந்தவர் அய்யாசாமி, 88. இவர் தடாகம் சாலை வேலாண்டிபாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று அய்யாசாமி மீது மோதியது. இதில் கீழே விழுந்த முதியவருக்கு தலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பலத்த காயம் பட்டது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.* இதேபோல், கவுண்டம்பாளையம் பி அண்ட் டி காலனியை சேர்ந்த காளிதாஸ், 54. இவர் தனது இரு சக்கர வாகனத்தில் வரதராஜபுரம் சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோ காளிதாஸ் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த காளிதாஸின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்தவர்கள், காளிதாஸைமீட்டு இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
30-Oct-2024