சிட்டி கிரைம்
பைக் விபத்தில் வாலிபர் பலி
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தை சேர்ந்தவர் பவன்ராஜா சிம்மன், 25. நேற்று முன்தினம் இவர், தனது நண்பர் அம்மன் நகரை சேர்ந்த,ஹரிஷ், 21 உடன் பைக்கில் ஈச்சனாரி அருகே சென்று கொண்டிருந்தார். பொள்ளாச்சி ரோட்டில் தனியார் கல்லூரி அருகே, பைக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி பவன் ராஜா சிம்மன் உயிரிழந்தார். ஹரீஷ்க்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். முன்விரோத தாக்குதல் நால்வர் மீது வழக்கு
கோவை, சின்னவேடம்பட்டி சுபநாயக்கன்புதூரை சேர்ந்தவர் சர்ஜூன், 20; தனியார் நிறுவன ஊழியர். சர்ஜூன் பணிக்கு பைக்கில் செல்லும் போது, அதே பகுதியை சேர்ந்த சிலர் சர்ஜூனை கேலி செய்துள்ளனர். இதனால், அவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்தது. நேற்று அவர்கள் மோதிக்கொண்டனர். ஆத்திரமடைந்த சின்னவேடம்பட்டியை சேர்ந்த மோகன், 22 மற்றும் அவருடன் வந்த மூவர், சர்ஜூனை தாக்கினர். அவருக்கு காயம் ஏற்பட்டது. சரவணம்பட்டி போலீசார் மோகன் மற்றும் அவரது நண்பர்கள் மூவர் மீது, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். புகையிலைப் பொருள் விற்ற இருவர் கைது
கோவை, ராஜவீதியில் உள்ள கடைகளில் வெரைட்டிஹால் ரோடு போலீசார், நேற்று புகையிலைப் பொருட்கள் குறித்த சோதனை நடத்தினர். அங்கு புகையிலைப்பொருட்களை சிலர் பதுக்கி விற்பனை செய்தது தெரிந்தது. போலீசார் தாமஸ் வீதியை சேர்ந்த ஜவஹர், 24, பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம், 62 ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 4.714 கிலோ குட்கா மற்றும் மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.