மேலும் செய்திகள்
21 கிலோ கஞ்சா பறிமுதல் வடமாநில வாலிபர் கைது
06-Mar-2025
உக்கடம், சி.எம்.சி., காலனியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், உக்கடம் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சி.எம்.சி., காலனி பகுதியில் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் உக்கடம், ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த அப்துல் காதர், 30 என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 160 கிராம் கஞ்சா, மொபைல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மோட்டார் திருடியவருக்கு சிறை
நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி ஜெயராஜ், 56. அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி கட்டட வேலைகளை பார்வையிட சென்றிருந்தார். அப்போது, கட்டடத்தின் உள்ளிருந்து ஒரு நபர் கையில் தண்ணீர் மோட்டார் மற்றும் அதற்கான கேபிள் ஆகியவற்றுடன் வெளியில் வந்தார்.அதைப்பார்த்து, ரவி சத்தம் போட அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து திருடனை கையும் களவுமாக பிடித்தனர். சிங்காநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்ததில் மோட்டார் திருடியவர் நீலிக்கோணாம்பாளையம், சென்னா தோட்டம் பகுதியை சேர்ந்த பழனிசாமி, 42 என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். போதை மாத்திரை விற்பனை
ஆர்.எஸ்.புரம் போலீசார் பி.என்.புதுார், பாரதி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த வாலிபரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்க, அவரை சோதனை செய்த போது, போதைக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. 10 மாத்திரைகள், ரூ. 1,700ரொக் கத்தை பறிமுதல் செய்த போலீசார், வீரகேரளத்தை சேர்ந்த சபரிகிரி, 27 என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
06-Mar-2025