மேலும் செய்திகள்
சிட்டி கிரைம் கோவை_சிட்டி
10-May-2025
துடியலுார், கே.என்.ஜி., புதுார் தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் வெங்கட் ராமகிருஷ்ணா, 68; இவரது மனைவி சகுந்தலா, 64. கடந்த 10 ஆண்டுகளாக மன அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 23ம் தேதி இரவு வெங்கட்ராமகிருஷ்ணன் மற்றும் சகுந்தலா ஆகியோர் துாங்க சென்றனர். நள்ளிரவு, 2:15 மணிக்கு அடுக்குமாடி குடியிருப்பு காவலர், வெங்கட் ராமகிருஷ்ணனை அழைத்து, அவரது மனைவி மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர், அவர் சகுந்தலாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். துடியலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மது விற்றவருக்கு சிறை
உக்கடம் போலீசார் நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, லங்கா கார்னர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மது பாருக்குள் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது தெரியவந்தது. போலீசார் அங்கிருந்த 254 மது பாட்டில்கள், ரூ.3,197 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மது விற்பனை செய்த புதுக்கோட்டையை சேர்ந்த பிரபுவை, 37 கைது செய்து சிறையில் அடைத்தனர். குட்கா விற்ற நான்கு பேர் கைது
கோவை மாநகர பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, காந்திபுரம் ஜி.பி., சிக்னல் அருகில், சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர்., ரோட்டில் உள்ள ஒரு கடை, பீளமேடு, ஆவராம்பாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடை மற்றும் தண்ணீர்பந்தல் சாலையில் ஒரு பெட்டி கடை என நான்கு இடங்களில், குட்கா விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. குட்கா விற்ற ரத்தினபுரியை சேர்ந்த தனமுருகன், 23, கே.கே., புதுாரை சேர்ந்த ஹரிதாஸ், 61, நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்த தங்கதுரை, 50 மற்றும் பீளமேட்டை சேர்ந்த அத்தாயி, 70 ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
10-May-2025