உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டி கிரைம் செய்திகள்

சிட்டி கிரைம் செய்திகள்

செக்யூரிட்டி மீது தாக்குதல்

கோவை சாய்பாபா கோவிலை சேர்ந்தவர் ரங்கநாதன், 30. தனியார் நிறுவன செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 4 ம் தேதி கோவை மேட்டுப்பாளையம் ரோடு, பஸ் ஸ்டாண்ட் அருகே பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு மதுபோதையில் ஒருவர் வந்தார். அவரை அங்கிருந்து செல்லுமாறு ரங்கநாதன் தெரிவித்தார். அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகராறு செய்தார். தொடர்ந்து ரங்கநாதனை கட்டையால் தாக்கிய அந்நபர், கொலை மிரட்டல் விடுத்தார். ரங்கநாதன் புகாரின் பேரில், வழக்கு பதிந்த சாய்பாபா காலனி போலீசார் விசாரித்தனர். ரங்கநாதனை தாக்கியது, ரத்தினபுரியை சேர்ந்த ஜான் வர்க்கீஸ், 43 எனத் தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

தீவிபத்தில் மூதாட்டி பலி

கோவை வெள்ளக்கிணறு பிரிவை சேர்ந்தவர் நடராஜன், 80. இவரது மனைவி, தங்கமணி, 72. கடந்த சில தினங்களுக்கு முன், தங்கமணி வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது சமையல் காஸ் கசிந்து, தீவிபத்து ஏற்பட்டது. தங்கமணி பலத்த காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துடியலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

வடமாநில வாலிபர் தற்கொலை

ஜார்கண்ட் மாநிலம், வித்யாபுரியை சேர்ந்தவர் பிரியேஷ்குப்தா, 26; சாப்ட்வேர் இன்ஜினியர். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பெற்றோரை விட்டு பிரிந்து வந்ததால், சோகத்தில் இருந்தார். நேற்று முன்தினம், தங்கியிருந்த அறையில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அறையில் உடன் தங்கியிருந்த நண்பர்கள் அவரை மீட்டு, கோவை இ.எஸ்.ஐ.,மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை