உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டி கிரைம் செய்திகள்

சிட்டி கிரைம் செய்திகள்

சிறுவனை தாக்கியவர் கைது

கோவை, சொக்கம்புதுாரைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி, 37. இவரது வீட்டுக்கு அருகில் கு டியிருப்பவர் பிரதாப், 26. நேற்று முன்தினம் பாக்கியலட்சுமியும், பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணும் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த பிரதாப், தண்ணீர் பிடிப்பதை தடுத்ததால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து, பாக்கியலட்சுமி வீட்டுக்கு வந்த பிரதாப், வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த அவரது மகனை, தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்து, பிரதாப்பை கைது செய்தனர்.

மிரட்டல் விடுத்தவர் கைது

குனியமுத்துார் வெத்தலைக்கார வீதியை சேர்ந்தவர் லோகேஸ்வரி, 25. அதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 34. இரு ஆண்டுகளுக்கு முன், லோகேஸ்வரியின் தந்தையை தாக்கிய வழக்கில், சதீஷ்குமார் சிறைக்குச் சென்றார். நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த அவர், லோகேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தாரை மிரட்டி வந்தார். 14ம் தேதி இரவு லோகேஸ்வரி வீட்டுக்கு முன் வந்த சதீஷ்குமார், லோகேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தாரை தரக்குறைவாக பேசி, மிரட்டல் விடுத்தார். குனியமுத்துார் போலீசார் வழக்கு பதிந்து, சதீஷ்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி