உள்ளூர் செய்திகள்

சிட்டி கிரைம்

மொபைல்கள் திருட்டு

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் ஷாகீம் மிச்சாரி, 21. கோவை இருகூர் தீபம் நகரில் தங்கி தனியார் கல்லுாரியில் பி.டெக்., நான்காம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று முன்தினம் அறையில் நண்பர்களுடன் இருந்த போது, நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்த ஷாகீம் மிச்சாரி மற்றும் அவரது நண்பர்களை தாக்கி, அவர்களிடம் இருந்த ஐந்து மொபைல்போன்களை பறித்து தப்பியது. ஷாகீம் மிச்சாரி அளித்த புகாரின் அடிப்படையில், சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்றவர்கள் ைகது

வடவள்ளி போலீசார் ரோந்து பணியின் போது பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த நபரை பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், அவர் வடவள்ளி பொம்மனம்பாளையம் தினேஷ்குமார், 25 எனத் தெரிந்தது. போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.* இதேபோல், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கோவை ரத்தினபுரி மாரப்பன் வீதியை சேர்ந்த விஷ்ணு, 24 என்பவரை சிறையில் அடைத்தனர்.கஞ்சா விற்றதாக, கரும்புக்கடை போலீசார் மேற்கு வங்கம் மால்டாவை சேர்ந்த அபுபக்கர் சித்திக், 23, மஜீத் அலி, 32 ஆகியோரையும் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை