மேலும் செய்திகள்
எம்.ஆர்.கே., கல்லுாரியில் துாய்மை பணி
01-Oct-2024
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், 'துாய்மை இந்தியா திட்டம்' குறித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி தாளாளர் மகேந்திரன் தலைமை வகித்தார்.கல்லுாரியிலும், பொது இடங்களிலும் மாணவர்கள் குப்பையை திறந்தவெளியில் வீசக்கூடாது. துாய்மை இந்தியா திட்டம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.வீடு மற்றும் கடைகளில் சேகரமாகும் குப்பையை, தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். நகரை சுத்தமாக பராமரிக்க நகராட்சிக்கு ஓத்துழைப்பு அளிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, மாணவ, மாணவியர் அனைவரும் ஒன்றிணைந்து, 'சுற்றுப்புற துாய்மையை பாதுகாக்க முனைப்புடன் செயல்படுவோம்,' என, உறுதிமொழி ஏற்றனர். கல்லுாரி கல்வி சார் தாளாளர் சிவானிகிருத்திகா, முதல்வர் கண்ணன், என்.எஸ்.எஸ்., அலுவலர் குணப்பிரியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
01-Oct-2024