உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிணற்று பகுதியை சுத்தம் செய்யுங்க!

கிணற்று பகுதியை சுத்தம் செய்யுங்க!

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பொது கிணற்றை சுற்று பகுதியை சுத்தம் செய்ய மக்கள் வலியுறுத்துகின்றனர். கிணத்துக்கடவு, 4வது வார்டு போலீஸ் ஸ்டேஷன் அருகே பொது கிணறு உள்ளது. கிணற்று நீர், இப்பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது, இந்த கிணற்றை சுற்றிலும் அதிகளவு செடி, கொடிகள் முளைத்து புதர் போல் காட்சியளிக்கிறது. தினமும் குடியிருப்பு பகுதி மக்கள் மற்றும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவோர் இவ்வழியை பயன்படுத்துகின்றனர். கிணற்றுப் பகுதியில் அடிக்கடி பாம்பு ஊர்ந்து செல்வதை கண்டு, மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, பொதுக்கிணற்றை சுற்றிலும் வளர்ந்துள்ள புதரை அகற்றம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி