உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதுர காளியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

மதுர காளியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

அன்னுார்: மதுர காளியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா இன்று நடக்கிறது. லக்கேபாளையம் கோவில்பாளையத்தில், 350 ஆண்டுகள் பழமையான ஈஞ்சங்குலத்தாரின் குலதெய்வமான மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக முழுவதும் கருங்கற்களால் கருவறை, மகா மண்டபம், வசந்த மண்டபம், கட்டப்பட்டு பரிவார தெய்வங்கள் நிறுவப்பட்டன. கடந்த செப். 4ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வந்தது. மண்டல பூஜை நிறைவு விழாவில் நேற்று திருவிளக்கு வழிபாடு நடந்தது. ஆயிரம் முறை போற்றி என உச்சரித்து மலர்களால் வழிபடும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 8:30 மணிக்கு வேள்வி வழிபாடும், 108 சங்கு பூஜையும் நடைபெறுகிறது. காலை 9:30 மணிக்கு மகா அபிஷேகமும், 10:30 மணிக்கு சங்கு அபிஷேகமும், 11:30 மணிக்கு அலங்கார பூஜை, பேரொளி வழிபாடும் நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்று இறையருள் பெற நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ