உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அருவியில் குளிக்கும் போது ஆடை கட்டுப்பாடு அவசியம்

அருவியில் குளிக்கும் போது ஆடை கட்டுப்பாடு அவசியம்

பொள்ளாச்சி: ஆழியாறு கவியருவில் குளிக்க, ஆண்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க சுற்றுலாப்பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி அருகே, ஆழியாறு கவியருவிக்கு அதிகளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். அருவியில் குளிக்க, வனத்துறையால் நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அருவியில் குளித்து மகிழ்கின்றனர். ஆனால், அருவில் குளிக்க, ஆண்கள் மற்றும் பெண்களுக்காக, தனித்தனியே இடம் கிடையாது. இதனால், பெண்கள் நிம்மதியாக குளிக்க முடியாத நிலை உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில், ஆண்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'ஆண்கள் உள்ளாடையுடன் துண்டு கட்டி குளிக்கவே அறிவுறுத்துகிறோம். ஆனால், சிலர், உள்ளாடையுடன் குளிக்கின்றனர். இத்தகைய போக்கை தடுக்க, கண்காணித்து அறிவுறுத்தப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி