மேலும் செய்திகள்
சேவல் சண்டை நடத்திய ஐந்து பேர் கைது
30-Nov-2024
தொண்டாமுத்தூர்; நரசீபுரத்தில், சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து, தப்பியோடிய மூவரை தேடி வருகின்றனர்.ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எஸ்.ஐ., கவியரசு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நரசீபுரத்தில் தனியார் தோட்டத்தின் அருகே பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக, ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த விராலியூரை சேர்ந்த பூபால்சாமி,32, வினோத்குமார், 19, சிவராமன்,22, நரசீபுரம், ஆத்தூரை சேர்ந்த பழனிசாமி, 38, கிட்டுசாமி, 42 ஆகிய ஐந்து பேரையும், போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 1,900 ரூபாய் பணம் மற்றும் நான்கு சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய, கவுதம், கதிர், மூர்த்தி ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர்.
30-Nov-2024