மேலும் செய்திகள்
இ-நாம் திட்டத்தில் உளுந்து விற்பனை
24-Dec-2024
அன்னுார்,; அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏல விற்பனை வரும் 29ம் தேதி துவங்குகிறது. கோயமுத்தூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை : கோயம்புத்தூர் விற்பனை குழு சார்பில், அன்னுார், சத்தி ரோட்டில் உள்ள, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் விவசாய விளை பொருட்கள் ஏலம் வருகிற 29ம் தேதி துவங்குகிறது. அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடம், தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் (இ -நாம்) இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை ஏலம் நடைபெறும். உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் பங்கேற்று கொள்முதல் செய்ய உள்ளதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். விவசாயிகள் தங்களது வங்கி பாஸ் புத்தகம் மற்றும் ஆதார் அட்டை நகல்களை கொண்டுவர வேண்டும். விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை தரம் பிரித்து நல்ல முறையில் விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். அனைத்து வகையான பழங்கள், காய்கறிகளை ரகம் வாரியாக பிரித்து வந்து விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 99423 28959 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24-Dec-2024