மேலும் செய்திகள்
சூலுாரில், 24ம் தேதி தேங்காய் ஏலம் துவக்கம்
21-Jul-2025
அன்னுார்; வாராந்திர ஏலத்தில் பங்கேற்க, விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் அழைப்பு விடுத்துள்ளது. அன்னுார், சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், புதன்கிழமை தோறும், வேளாண் விளை பொருட்கள், ஏல விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக தேங்காய் கொப்பரை, பருத்தி, ஆகியவற்றிற்கு நல்ல விலை கிடைக்கிறது. எந்த இடைத்தரகு கமிஷனும் தரத் தேவையில்லை. விற்பனை செய்ய முடியாவிட்டால், இங்கு இருப்பு வைத்து நல்ல விலை வரும்போது விற்பனை செய்யலாம். இருப்பு வைக்கும் பொருட்களுக்கு குறைந்த வட்டியில் கடன் தரப்படும். 'எனவே, இன்று நடைபெறும் ஏலத்தில் பங்கேற்று விவசாயிகள் பயன்பெறலாம்,' என ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
21-Jul-2025