உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தென்னை சாகுபடி மேம்பாடு பயிற்சி

 தென்னை சாகுபடி மேம்பாடு பயிற்சி

'திருப்பூரில் தென்னை சாகுபடி மேம்பாடு திட்டம் தொடர்பான பயிற்சி வழங்கப்படுகிறது' என, வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சரவணன் கூறியதாவது: திருப்பூர் மாவட்ட அளவில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை சாகுபடி மேம்பாடு தொடர்பாக, விவசாயிகளுக்கு தொடர் பயிற்சி வழங்கி வருகிறோம். தென்னை வளர்ச்சி வாரிய நிதியுதவியுடன், கோவை வேளாண் பல்கலை விஞ்ஞானிகளுடன் இணைந்து, தென்னை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது, தென்னையை தாக்கும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பான பயிற்சி வழங்கி வருகிறோம். அதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையினருடன் இணைந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை