மேலும் செய்திகள்
தேங்காய் விலை தொடர்ந்து அதிகரிப்பு
19-Jun-2025
அன்னுார்; ஏலத்தில் தேங்காய் ஒரு கிலோ 71 ரூபாய்க்கு விற்பனையானது. அன்னுார்-சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று, வேளாண் விளை பொருட்கள் ஏல விற்பனை நடக்கிறது. இதில், நேற்று, 24 ஆயிரத்து 950 தேங்காய்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதன் மதிப்பு 5 லட்சத்து 50 ஆயிரத்து 810 ரூபாய் ஆகும்.தேங்காய் குறைந்தபட்சம் ஒரு கிலோ 57 ரூபாய் 50 காசு முதல், அதிகபட்சமாக 71 ரூபாய் 10 காசு வரை விற்பனையானது.தேங்காய் கொப்பரை குறைந்தபட்சம் ஒரு கிலோ 190 ரூபாய் 59 காசு முதல், அதிகபட்சம் 262 ரூபாய் 16 காசு வரை விற்பனையானது. 332 கிலோ தேங்காய் கொப்பரை விற்பனைக்கு வந்திருந்தது.இத்தகவலை கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் தெரிவித்தார்.
19-Jun-2025