மேலும் செய்திகள்
ஏலத்தில் தேங்காய் விலை குறைந்தது
06-Nov-2026
அன்னூர்: அன்னூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விளை பொருட்களின் ஏல விற்பனை நடந்தது. இதில் 1,980 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு கிலோ 43 ரூபாய் 10 பைசா முதல், அதிகபட்சமாக 47 ரூபாய் 99 பைசா வரை விற்பனையானது. தேங்காய் கொப்பரை 110 மூட்டை வந்திருந்தது. ஒரு கிலோ குறைந்தது 101 ரூபாய் 69 பைசா முதல், அதிகபட்சமாக, 153 ரூபாய் 53 பைசாவுக்கு விற்பனையானது. தேங்காய் தொட்டி 30 குவின்டால் வந்திருந்தது. ஒரு கிலோ 19 ரூபாய் 86 பைசாக்கு விற்பனையானது. மொத்தம் 16 லட்சத்து 31 ஆயிரத்து 667 ரூபாய்க்கு பொருட்கள் விற்பனையானது. இத்தகவலை கோயம்புத்தூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் தெரிவித்தார்.
06-Nov-2026