உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை தொழிலதிபருக்கு கவுரவ டாக்டர் பட்டம்

கோவை தொழிலதிபருக்கு கவுரவ டாக்டர் பட்டம்

கோவை; கோவையை சேர்ந்த தொழில் முனைவோரான அருணாசலம் முருகானந்தம்,64, பெண்கள் பயன்படுத்தும், 'சானிட்டரி பேட்' தயாரிக்க, குறைந்த விலையில் இயந்திரம் கண்டுபிடித்து, இந்தியா முழுவதும் பிரபலமானார்.இவரது சமூக சேவையை பாராட்டி, மத்திய அரசு, 2016ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. அவருடைய வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு, நடிகர் அக்சய்குமார் நடிப்பில், 'பேட் மேன்' என்ற ஹிந்தி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பத்மஸ்ரீ அருணாசலம் முருகானந்தத்திற்கு, ைஹதராபாத் காந்தி தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனம் (கீதம்) சார்பில், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !