உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சென்னைக்கு விமானத்தில் பறந்த  கோவை குழந்தைகள்

சென்னைக்கு விமானத்தில் பறந்த  கோவை குழந்தைகள்

கோவை; 'பிளைட் ஆப் பேன்டசி' எனும் திட்டம் மூலம் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு, ஏழை குழந்தைகளை விமானத்தில் அழைத்து சென்று வருகிறது. கோவை ஜெம் மருத்துவமனை மற்றும் கோவை ஆக்மி ரவுண்ட் டேபிள் 133, கோவை பென்டா ரவுண்ட் டேபிள் 101, திருப்பூர் ரவுண்ட் டேபிள் 116, மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் 95 சார்பில், 25 ஏழை குழந்தைகள் விமானத்தில் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.கோவையிலிருந்து அதிகாலை சென்னைக்கு சென்ற குழந்தைகள், அங்கு சென்னை கோளரங்கம் மற்றும் அக்குவாரியத்தை பார்த்து விட்டு, மீண்டும், விமானத்தில் கோவை வந்தனர்.ஏரியா தலைவர் ராகுலன் சேகர், மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் 95ன் தலைவர் வருண் ஆனந்த், கோவை ஆக்மி ரவுண்ட் டேபிள் 133ன் தலைவர் சுபாஷ், திருப்பூர் ரவுண்ட் டேபிள் 116ன் தலைவர் பார்த்திபன், கோவை பென்டா ரவுண்ட் டேபிள் 101ன் தலைவர் குணால் மற்றும் 'பிளைட் ஆப் பேன்டசி திட்டத்தின் கன்வீனர் மோகன்ராஜ் வழிகாட்டிகளாக செயல்பட்டனர். ஜெம் மருத்துவமனையில் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ் கூறுகையில், இது போன்ற அன்பின் சிறு வெளிப்பாடுகள், இந்த குழந்தைகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கோபாலன்
மார் 27, 2025 10:36

நல்ல செய்தி. அனைத்தும் ஆண் பிள்ளைகள் போல தெரிகின்றது. பெண் பிள்ளைகளுக்கு என்று மற்றும் ஒரு பயணம் ஏற்பாடு செய்ய உள்ளது போல் தெரிகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை