வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கலெக்டரின் காரில் எதுக்கு ஆறு ஹார்ன் ?
யூஸ் பண்ண தான்
கோவை: கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மண் கொள்ளையை தடுக்க கோரி, சிவா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள், மனுவில் குறிப்பிட்டுள்ள கிராமங்களுக்கு கலெக்டர், எஸ்.பி., மற்றும் கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்து, மண் திருடுவோரை கைது செய்ய வேண்டும்; இயந்திரங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டனர்.இதன் எதிரொலியாக, தொண்டாமுத்துார் வட்டார பகுதிகளில் உள்ள கரடிமடை, ஆலாந்துறை அடுத்த மூங்கில் மடை குட்டை மூலக்காடு, வெள்ளெருக்கம்பாளையம், வேட்டைக்காரன் கோவில் செல்லும் வழியில் உள்ள பட்டா நிலங்களில், சட்டவிரோதமாக மண் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களில், கலெக்டர் கிராந்திகுமார் நேற்று ஆய்வு செய்தார். முறைகேடு செய்தவர்கள் மீது வழக்கு பதியவும், மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்யவும், அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கவும், உத்தரவிட்டார். பேரூர் தாசில்தார் ரமேஷ், கனிமவளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.
கலெக்டரின் காரில் எதுக்கு ஆறு ஹார்ன் ?
யூஸ் பண்ண தான்