கோவை மாவட்டத்துக்கு நடப்பாண்டு கடன் இலக்கு 69,498 கோடி ரூபாய்
கோவை : கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான மாதாந்திர வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது.இக்கூட்டத்தில், கோவை மாவட்ட வங்கிகளின் திருத்தியமைக்கப்பட்ட கடன் திட்ட புத்தகத்தை கலெக்டர் வெளியிட்டார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன், நபார்டு வங்கி துணை பொது மேலாளர் அன்பரசு, தாட்கோ மாவட்ட மேலாளர் மகேஸ்வரி உள்ளிட்ட, அனைத்து வங்கியாளர்கள் பங்கேற்றனர்.கலெக்டர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்துக்கும், வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. இதனடிப்படையில், கோவை மாவட்டத்துக்கு, 2025-26 ம் ஆண்டுக்கு, ரூ.64,900 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட கடன் திட்டத்தில் விவசாயத்துக்கு, ரூ.27,730.46 கோடியும், சிறு குறு நடுத்தர தொழிலுக்கு, ரூ.39,774.25 கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக்கு, ரூ.1993.53 கோடி என மொத்தம் ரூ.69,498.24 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.