மேலும் செய்திகள்
70 சதவீதம் வரை தள்ளுபடி; விதவிதமான புது ரகங்கள்
18-Oct-2024
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 'மெகா கிளியரன்ஸ்' விற்பனை, கோவை மருதம் விற்பனை நிலையத்தில், வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. பட்டுப்புடவைகள், பருத்தி சேலைகள், மென்பட்டு, காட்டன், இயற்கை சாயமிட்ட பருத்தி காட்டன், காஞ்சி காட்டன், பரமக்குடி காட்டன், சுங்குடி சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதார் ரகங்கள், குர்தீஸ், நைட்டிகள், ஆடவர்களுக்கான ரெடிமேட் சட்டைகள் போன்ற சில குறிப்பிட்ட ரகங்களுக்கு 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.ஞாயிறு உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் மருதம் விற்பனை நிலையம், கோவையில் செயல்படும். மாதாந்திர சேமிப்பு திட்டம் ரூ.100ல் இருந்து துவங்குகிறது. வாடிக்கையாளர்கள், 11 மாத சந்தா தொகையை செலுத்தினால், 12வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தும். கூடுதல் முதிர்வு தொகைக்கு துணிகளை பெறலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்த, முதுநிலை மண்டல மேலாளர் அம்சவேணி அழைப்பு விடுத்துள்ளார்.தொடர்புக்கு: 99448 45919.
18-Oct-2024